Saturday 26 October 2019

கல்விச் செய்திகள் தொகுப்பு - 27•10•2019

👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2050 ஐப்பசி 10 ♝ &   27•10•2019


🔥
🛡அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துகள்..
தீபம் ஒளி வீசுவதுபோல் உங்கள் வாழ்வு முழுமையும் ஒளி வீசட்டும்!
இன்பம் பொங்கட்டும் ! மகிழ்ச்சி தங்கட்டும்!!

🔥
🛡அரசு பள்ளிகளில், 'EMIS' இணையதள பதிவேற்றம் உள்ளிட்ட பணி அதிகரிப்பதால், கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகின்றது  - நாளிதழ் செய்தி

🔥
🛡17 ஆண்டுகளாக படகோட்டி, மலையேறிச் சென்று பழங்குடிகளுக்கு பாடம் கற்பிக்கும் கேரள ஆசிரியருக்கு  தமிழகத்தில்
'சிறந்த சமூக செயல்பாட்டிற்கான அறம்'
சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

🔥
🛡 தனியார் இணையதள மையங்களில் EMIS பணிகளுக்காக  தவம் கிடக்கும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள். பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இணையதளத்தில் பதிவேற்றம் பணிகளை தினந்தோறும் வழங்கும் கல்வித்துறை - நாளிதழ் செய்தி

🔥
🛡பணிமாறுதல் சம்பள உயர்வு மகப்பேறு விடுப்பு EPF ESIசலுகைகள் தரவேண்டும். தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்

🔥
🛡EMIS ல் CCE மதிப்பெண்கள் தவறுதலாக பதிந்து FINAL SUBMIT கொடுத்துவிட்டாலும் திருத்திக்கொள்ள update வசதி செய்யப்பட்டுள்ளது.

🔥
🛡அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 303 கெளரவ விரிவுரையாளா்களை நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

🔥
🛡ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.ed படிக்க முடியுமா ? என்று  RTI -இல் கேட்கப்பட்ட கேள்விக்கு பல்கலைக்கழக மான்ய குழுவால்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பகுதிநேர படிப்பாகவோ அல்லது தொலைத்தூர கல்வி மூலமாகவோ படிக்கலாம் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதால், அரசு ஊழியர்கள் தங்கள் விரும்பும் புதிய/பழைய மாவட்டத்தில் பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் 5.11.2019 மாலை 5 மணிக்குள்,  வந்து சேர வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

🔥
🛡அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து : காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡தமிழகத்தின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ல் 'தமிழ்நாடு நாள்' கொண்டாட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் கருத்தரங்கம், கவியரங்கம் நடத்தவும், மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================