Wednesday 9 October 2019

10•10•2019 இன்றைய கல்விச் செய்திகள்

*2050 புரட்டாசி 23 ♝ &   10•10•2019

🔥
🛡பள்ளிக் கல்வித் துறையால் மறு நியமனம் (Extension) மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு (வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும்) மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

🔥
🛡மத்திய அரசு ஊழியர் களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

🔥
🛡தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக் 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை : அக். 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஈடுசெய் விடுமுறை விடலாம் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

🔥
🛡அனைத்து அரசுப் பள்ளிகளில் 6 மாத காலத்தில் கணினி வசதி ஏற்படுத்தப்படும்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

🔥
🛡விஞ்ஞானத்தில் சிறந்து விளங் கும் 100 அரசுப் பள்ளி மாணவர் கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்கள் இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தகவல்.

🔥
🛡சென்னை,  இராமநாதபுரம்,  அரியலூர் ஆகிய 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் துணை இயக்குநர் ( மின் ஆளுமை)  மாற்றம் செய்து  தமிழக அரசு அரசாணை வெளியீடு.

🔥
🛡NCERT - 3 Days National Conference on Language Pedagogy for Teachers in Rajasthan on December.

🔥
🛡ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - பள்ளிக்கல்வி  அமைச்சர்  தகவல்

🔥
🛡உள்ளாட்சி தேர்தலுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

🔥
🛡சிறப்பாசிரியர் நியமனம் ! இறுதிப்பட்டியலில் குளறுபடி உள்ளதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கலையாசிரியர் நலச்சங்கம் புகார்!

🔥
🛡இந்து குழும'த்திலிருந்து வெளியாகும் 'வெற்றிக்கொடி' நாளிதழால் மாணவர்கள் திறன் மெருகேறும் : முதல் பிரதியை வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து.

🔥
🛡ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

🔥
🛡தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 10 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து நடவு செய்தனர் - நாளிதழ் செய்தி

🔥
🛡டிசம்பர் மாதம் நடைபெறும் NET Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.9) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், தற்போது நெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக்டோபர் 15 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================