Wednesday 9 October 2019

துளிர் திறனறிதல் தேர்வு - THULIR TALENT - TEST 2019


*அன்புடையீர் வணக்கம்!*
மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துளிர் திறனறிதல் தேர்வை (TTT) நடத்தி வருகிறது. பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு உதவியாகவும் பயிற்சி பெறும் வகையிலும், நடைபெற்று வரும் இத்தோ்வில் மாநிலம் முழுவதும் இலட்சக்கணக்கான மாணவா்கள் பங்கேற்கின்றனா்.  6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற துளிர் திறனறிதல் தேர்வு இந்த வருடம்,  முதல் முறையாக 4 மற்றும் 5 வகுப்புகளுக்கும் நடைபெற உள்ளது.

*தேர்வுக்கான* *விதிமுறைகள்*

**நான்காம் வகுப்பு* *மற்றும் ஐந்தாம் வகுப்பு* பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெறலாம்

*தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் பங்கேற்கலாம்.

*பதிவுக்கட்டணம் ரூ. 50

*தேர்வில் மாணவர்கள் 120 நிமிடங்களில் 100 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

*கேள்விகள் பின்வரும்* *பகுதிகளிலிருந்து* *கேட்கப்படலாம்.*

*புதிர்க்கணக்குகள்

*அறிவியல் மனப்பான்மை,

*சமூக அறிவியல்

*படமும் செய்தியும்,

*சொற்சுருக்கம்.

நான்கு விடைகளிலிருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் வகையில் (objective type) இருக்கும்.

பெரும்பாலான வினாக்கள் மாணவர்கள் சிந்திக்கும் திறனையும், காரண காரியங்களை அறியும் திறனையும், சோதிக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

விடைத்தாள்  OMR தாளில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சிலால் நிரப்பும் வண்ணம் இருக்கும்.

*பங்கேற்போர் பெறும்* *பயன்கள்,* *பரிசுகள்*
*தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

*பங்கு பெறும் அனைத்து மாணவா்களுக்கும் ரூ. 50 மதிப்புள்ள அறிவியல் வெளியீடுகள் (புத்தகங்கள்) அல்லது சிறுவா் / குழந்தைகள் அறிவியல் இதழ்கள் வழங்கப்படும்.

*ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கு சிறப்பு நிகழ்வுகள்,  விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றும் பாராட்டு, பரிசுகள் வழங்கப்படும்.

*50 பதிவுகளுக்கு மேல்  பதிவு செய்யும் பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்படும்.



*பதிவு செய்வதற்கு* *கடைசி நாள்*
*15/102019*

*தேர்வு நடைபெறும் நாள்*
*02/11/2019* *சனிக்கிழமை  காலை* *10.00 மணி* *முதல் 12.00 மணி வரை.*

*தேர்வு நடைபெறும்* *இடம்::*
ஒரு பள்ளியில் 50  மாணவர்கள் அல்லது அதற்கு அதிகமாக தேர்வில் பங்கு
பெற்றால் அப்பள்ளியிலேயே தேர்வு நடைபெறும்.

இல்லையெனில் இரண்டு மூன்று பள்ளிகள் பங்கு பெறும்படியாக அவர்கள் பகுதியிலேயே தேர்வு நடைபெறும்.

தங்களது பள்ளி மாணவ, மாணவர்கள் துளிர் திறனறிதல் தேர்வில் பங்கு பெற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகளைத்  தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

                                                                                                   
*R. ரமேஷ்*
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
(TTT)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
சேலம்.
9894166227
rkmsh84@gmail.com

*K. செங்கோட்டுவேல்,*
மாவட்ட
இணைஒருங்கிணைப்பாளர்(TTT)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
சேலம்
9500306285
senguttuvan84@gmail.com

*M.A  தோமினிக்*
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் (TTT)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
சேலம்
9442131944
metturdominic@yahoo.com
(மேட்டூர் கொளத்தூர் வட்டாரம்)

*வட்டார* *ஒருங்கிணைப்பாளர்கள்*

1 *.A.R. மகாலட்சுமி*
           ( சேலம்)
     9442980145

2. *C.V. சிவசங்கர்*             (ஆத்தூர்)
9442022035

3. *P.செங்கோடன்* (மகுடஞ்சாவடி)
   9486596174

4. *P. பிரபு* (பெத்தநாயக்கன்பாளையம்)
   9976659811

5. *R. கிருஷ்ணமூர்த்தி*   (ஏற்காடு)
9442559893

6. *V. கலைச்செல்வன்* (வாழப்பாடி)
9655300204

7. *M. யுவராஜ்*
( எடப்பாடி)
9791821945

8. *S. சிவக்குமார்* (மேச்சேரி)
9994734025

9. *R. முருகன்*
(சங்ககிரி)
9842530789

10. *A. அருள்பிரகாஷ்* (தலைவாசல்)
6369514448

11. *M. சீனிவாசன்* (நங்கவள்ளி)
8637499963

12. *P. பிரேம்குமார்** (தாரமங்கலம்)
9942289949.

============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================