ந.க.எண்:6362/அ4/2019 நாள்: 01.10.2019
பொருள் பள்ளிக் கல்வி – 2019-2020ம் கல்வி ஆண்டு – காலாண்டுத் தேர்வு - தேர்ச்சி பகுப்பாய்வு – அறிவுரை வழங்குதல் சார்பு.
---
2019-2020ம் கல்வியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் பள்ளி அளவில் 04.10.2019 அன்று நடத்தப்பட வேண்டும். மேலும் கல்வி மாவட்ட அளவிலான காலாண்டுத் தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் 09.10.2019 அன்று நடைபெறும்.எனவே அனைத்து அரசு / நகரவை / அரசு உதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ச்சி பகுப்பாய்வு விவரங்களை தயார் நிலையில் வைக்குமாறும் மேலும் காலாண்டுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக அளித்துள்ள ஆசிரியர்களிடம் விளக்கம் பெற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் பெற்று தயார் நிலையில் வைக்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 6-9 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வினை SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் கிரேடு (A,B,C,D,E)அடிப்படையில் தயார் செய்து பள்ளி அளவில் 04.10.2019 அன்று பகுப்பாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் கல்வி மாவட்ட அளவிலான காலாண்டுத் தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் நடைபெறும் நாளன்று பகுப்பாய்வு அறிக்கையினை தவறாமல் எடுத்து வர வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
திருப்பூர்.
பெறுநர்
அனைத்து அரசு / நகரவை / அரசு உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் திருப்பூர் மாவட்டம்.
நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பூர்/பல்லடம்/உடுமலை/தாராபுரம்-உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு. (உரிய இடங்களை தேர்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
============================================================================================
👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்...