🔶🔷சா.மணவாளன்
இனி *தமிழ் தெரியாதவர்களால் TNPSC தேர்வுகளில் வெற்றிபெற முடியாது* என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
#தமிழிலிருந்து #ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கவும், #ஆங்கிலத்திலிருந்து #தமிழில் மொழிப்பெயர்க்கவும் முதன்மைத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்காக வினாத்தாள் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் 25 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.
அப்படி 25 மதிப்பெண்களை பெறாதவர்களின் அடுத்த தாள் #திருத்தப்படாது, அவர்கள் #நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் #தமிழ் #எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள் மட்டுமே குரூப்-2 தேர்வு எழுத முடியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் #தமிழை #கட்டாயம் படிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதுநாள் வரை தொகுதி II மற்றும் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தேர்வாக முடியும்.
அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி தெரியாதவர்களால் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கும் தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கும் எதையும் மொழிபெயர்க்க இயலாது.
திருக்குறள் தொடர்பான கேள்விகள் 40 மதிப்பெண் அளவிற்கு இனி எழுத வேண்டிய சூழலுக்கு தமிழ் தெரியாதவர்களும் தள்ளப்படுவார்கள்.
தமிழில்
எழுத, படிக்கவே
தெரியாமல்,
தமிழ் வாழ்க
தமிழ் வாழ்க
என்று கூவுன பயல்களே,
சிபிஎஸ்இ ஸ்கூலாடா நடத்துறீங்க...?
தமிழில் பேசினால் அபராதமாடா...?
இனி உங்களால,
*முக்கவும் முடியாது*
*முனங்கவும் முடியாது.*
*முடக்கவும் முடியாது.
Monday, 7 October 2019
தமிழ் தெரியாதவர்களால் TNPSC தேர்வுகளில் வெற்றிபெற முடியாது !
TNPSC