Saturday 19 October 2019

🔥🔥🔥பாம்பு கடித்தால் வாயில் உறிஞ்சி ரத்தம் எடுப்பது தவறானது

📍📍📍108 வாகன செவிலியர் தகவல்


📌📌108 வாகனம் செயல்பாடு எப்படி? நேரில் விளக்கம் பெற்ற மாணவர்கள்

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பாக நேரில் விளக்கப்பட்டது.

                                                             ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை 108 வாகன பொறுப்பாளர்கள்  சரண்யா , மருதுபாண்டியன்  ,சார்லஸ் ஆகியோர் முதலுதவி தொடர்பாக மாணவர்களிடம் பேசுகையில், 108 தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் போய் சேர வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள்தான் அதிகம் 108 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.108 என்ற எண்ணுக்கான தொலைபேசி தொடர்பு இலவசம்தான்.இதன் கண்ட்ரோல் சென்னையில்தான் உள்ளது .அலைபேசி மூலம் தொடர்பு கொண்டதும் எந்த மாவட்டமாக எங்கே இருந்தாலும் 2 நிமிடத்தில் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது.எல்லா விஷயத்துக்கு போன் பண்ணலாம்.தீக்காயம்,பிரசவம்,காய்ச்சல்,பாம்பு கடித்தல் போன்ற அனைத்துக்குமே தொடர்பு கொள்ளலாம்.பாம்பு கடித்தல் , தீக்காயம் , காய்ச்சல்,வலிப்பு,கீழே விழுதல் போன்ற விபத்துகளில் எவ்வாறு  முதலுதவி செய்வது என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் விளக்கினார்கள்.மாணவர்கள் நதியா,ஜனஸ்ரீ ,அய்யப்பன்,அஜய்பிரகாஷ்,சிரேகா ஆகியோரின் சந்தேகங்களுக்கு  பதில் அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்தமீனாள் நன்றி கூறினார்.



பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பாக தேவகோட்டை 108 பொறுப்பாளர்கள் சரண்யா , மருதுபாண்டியன்  ,சார்லஸ் ஆகியோர் நேரில் விளக்கம் அளித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================