Wednesday, 2 October 2019

இன்றைய செய்திகள் 2.10.2019(புதன்கிழமை)


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹இன்று காந்தியின் 150 வது பிறந்த தினம்
🌹சர்வதேச அகிம்சை தினம்
🌹லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்
🌹காமராஜர் நினைவு தினம்
⛑⛑மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான இன்று, அனைத்து பள்ளிகளிலும் பிட் இந்தியா விழிப்புணர்வு ஓட்டம், விடுமுறை நாளில் மாணவர்களை வரவழைப்பதில் சிக்கல்
⛑⛑ஆந்திராவில் புதிதாக 1.26 லட்சம் பேர் அரசு வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கும் நிகழ்ச்சி 30.9.19(திங்கட்கிழமை) நடைபெற்றது. நாட்டிலேயே முதல் முறையாக பிரம்மாண்ட எண்ணிக்கையில் பணியில் சேர்க்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
⛑⛑ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த ஒரு வாரத்தில், வெற்றி பெற்றவர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
⛑⛑தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகனும் ஓய்வு பெற்றதால் சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு- தமிழ அரசு
⛑⛑மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளாருடன் மத்திய குழு ஆய்வு செய்தது.
⛑⛑கோதாவரி - காவிரி இணைப்புக்காக விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
⛑⛑தமிழகத்தில் இருப்பது தனித்துவம் மிக்கது: இந்தியாவிலேயே மூத்த மொழி தமிழ்மொழி. ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி புகழாரம்                                               ⛑⛑EMIS - 2017-18 , 2018-19 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலை மற்றும் பயின்று வரும் உயர்கல்வி விவரங்களை EMIS யில்பதிவு செய்ய உத்தரவு
⛑⛑மத்திய அரசு ஊழியர் புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு
மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே, அவருடைய குடும்பத்தாருக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய நடைமுறை, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
⛑⛑ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019 அன்று 11.59 பிற்பகல் வரை.
⛑⛑TRB -முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
⛑⛑மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியை கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனக்கோரி மாணவி அதிகை முத்தரசி (6) சார்பில் அவரது தந்தை பாஸ்கரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்
⛑⛑சிறப்பாசிரியர்கள் பணி இடங்களை நிரப்பக்கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ( TRB ) தேர்வர்கள் போராட்டம். தேர்வெழுதி 2 ஆண்டுகள்  முடிவுற்ற நிலையில் இன்னும் பணி நியமனம் செய்யப்படாததால் போராட்டம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================