Saturday 19 October 2019

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140


postal card

அஞ்சல் அட்டை என்பது ஒரு செவ்வக துண்டு தடிமனான காகிதம் அல்லது மெல்லிய அட்டை, உறை இல்லாமல் எழுதுவதற்கும் அஞ்சல் செய்வதற்கும் நோக்கம் கொண்டது .

 ஒரு கடிதத்தை விட குறைந்த கட்டணத்தில் அஞ்சலட்டை அனுப்பலாம் .

அஞ்சல் அட்டைகளின் ஆய்வு மற்றும் சேகரிப்பு டெல்டியாலஜி என்று அழைக்கப்படுகிறது .
1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் அஞ்சல் அட்டை ஆஸ்திரேலியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. உலகளவில் அஞ்சலட்டை வெளியிட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. வியன்னா ராணுவ கழகத்தைச் சேர்ந்த இமானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார்.

 இந்திய தபால் துறை இயக்குனர் ஜெனரல் இருந்த மோன்டீத் என்ற அதிகாரியின் முயற்சியால் 1879ல் அஞ்சல் அட்டை இந்தியாவில் அறிமுகமாகியது.
1- 7 -1879 ஆம் ஆண்டில் இந்தியாவில் அஞ்சலட்டை அறிமுகமானது.
 1879 ஆம் ஆண்டில் உள்நாடு மற்றும் வெளிநாடு அஞ்சலட்டை அறிமுகமாயிற்று. ராணியின் தலை உருவத்தை அச்சிட்ட உள்நாட்டு அஞ்சலட்டை விலை காலணா அரையணா மதிப்புள்ளதும் வெளிநாட்டு உபயோகத்திற்கு நீலநிற அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. இரண்டு வகை அஞ்சல் அட்டைகளும் லண்டனில் உள்ள தாமஸ் டீ லாரு அண்ட் கம்பெனியால்
1-07- 1879 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 1880 ஆம் ஆண்டு சர்வீஸ் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. 1883இல் பதில் அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது 24 -6 -1922அஞ்சலட்டை விலை காலணாவிலிருந்து அரை அணாவாயிற்று 15- 2 -1932 முதல் முக்கால் அணாவாயிற்று.
24 -6-1931 விமானசேவை தபால் அஞ்சல் அட்டை அறிமுகம் ஆயிற்று. சுதந்திரத்திற்கு முன்பு ராணி உருவம் பதித்த அஞ்சல் அட்டைகள், எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் சில மாதங்கள் வரை ஆறாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சலட்டை உபயோகப்படுத்தப்பட்டன.
 1955இல் பழுப்புநிற அரையணா அஞ்சலட்டை வெளியிடப்பட்டன. 1957இல் அசோக சக்கர முத்திரை கொண்ட அஞ்சல் அட்டைகள் வெளியாகின.
1-4-1957 அஞ்சல் அட்டைகளை 5 பைசா 1-4-1965ல் 6பைசா 15-5-1968 ல் 10 பைசா ஆனது.15-5-1978 இருந்து 1-6-1997 வருடங்கள் வரை 15 பைசாவாக புழக்கத்தில் இருந்த அஞ்சலட்டை பின்பு 25 பைசாவாக விலை உயர்ந்தது.
2-7-1979 இந்திய அஞ்சல் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரத்தியேக அஞ்சல் அட்டையை வெளியிட்டது. போட்டிகளுக்கான அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. மூணு பைசாவிற்கு அறிமுகமான அஞ்சலட்டை தற்போது ஐம்பது பைசாவிற்கு விற்கப்படுகிறது. அஞ்சலட்டை அச்சிட அரசிற்கு அதிகப்படியான செலவு ஏற்பட்டாலும் மலிவான தகவல் போக்குவரத்து சாதனம் தேவை என்பதால் மிகவும் குறைந்த விலைக்கு அஞ்சலட்டை விற்கப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை மேக்தூத் அஞ்சல் அட்டைகளை ஆகஸ்ட் 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அஞ்சல் அட்டையில் பெறுநர் விலாசத்தின் இடதுபுறம் விளம்பரம் இடம் பெற்றிருக்கும். முதல் மேக்தூத்
அஞ்சல் அட்டையில் ரஜினியின் பாபா தமிழ் திரைப்படம் விளம்பரம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய அஞ்சலட்டை 25 பைசாவிற்கு விற்கிறார்கள் 25 பைசா செலவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அஞ்சல் அட்டையில் தகவல்களை அனுப்பி பயன் பெறலாம்.
140 ஆண்டுகள் கண்ட இந்திய அஞ்சல் அட்டையினை சேகரித்து அஞ்சல் அட்டை வரலாறுகளை எடுத்துரைத்து வருகிறார் அஞ்சல் தலை சேகரிப்பாளரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார்.




*********************************************************

உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதல் பற்றி திருச்சி எலைட் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

hand washing day


உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி,  2008-ம் ஆண்டிலிருந்து கை கழுவும் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு எலைட் சிறப்புப் பள்ளியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது.

பள்ளித் தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.கைகழுவுதல் குறித்து இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா பயிற்றுநர் விஜயகுமார், ‘’கையினை முறையாக கழுவாததால் பல நோய் தொற்று  ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், வாகனம் ஓட்டி வந்த பிறகும்  கைகளை முறையாகக் கழுவ வேண்டும். அதோடு செல்போன், கணினி பயன்படுத்திய பிறகும் ,வீட்டில்  வளர்க்கும்   செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும்.

 கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்.
என விளக்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================