Wednesday 2 October 2019

தேசப்பிதா என்று அழைக்கப்படும் அண்ணல்" மகாத்மா காந்தி" பிறந்த நாள் இன்று : (02.10.1869-30.01.1948)



 காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில்  பிறந்தார்.
 இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளை கடைபிடித்தார்.

 காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007ல் அறிவித்தது.

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.

1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருட்களுக்கு அன்னியர் வரி விதிப்பதா?' எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.

 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக 'ஆகஸ்ட் புரட்சி' என அழைக்கப்படும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.

காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

அன்பின் வழியில் அறத்துடன் வாழ்ந்து, அகிம்சையை உலகிற்கு உணர்த்திய "தேசப்பிதா" வை வணங்குகிறேன்.👏👏👏
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================