Sunday, 25 August 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் - Today School Morning Prayer Activities -26-08-208

 School Morning Prayer Activities -26-08-208

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

26-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்- 182*

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
 புறனழீஇப் பொய்த்து நகை.

மு.வ உரை:

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

கருணாநிதி  உரை:

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

சாலமன் பாப்பையா உரை:

அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.

*பொன்மொழி*
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம்.
  - சிம்மன்ஸ்


*பழமொழி மற்றும் விளக்கம்*

*கோத்திரம் அறிந்து பெண் கொடு.பாத்திரம் அறிந்து பிச்சை இடு*

நாம் அறிந்த விளக்கம் :

நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும்இ அடுத்து தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :

ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை. அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும். இதுவே இதன் விளக்கம் ஆகும்.



*பொது அறிவு*

1) அதிக வேகமாய் செல்லக்கூடிய படகை கண்டுபிடித்தவர்?

பார் லானின்

2) சார்லஸ் பாப்பேஜ் எந்த நாட்டை சேர்ந்தவர்?

இங்கிலாந்து


*Important Words*

 Castor-seed ஆமணக்கு

 Wine மது

 Honey தேன்

 Mustard கடுகு

 Treacle சர்க்கரை ஜீரா



*விடுகதை*

1. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?

தையல்காரர்

2.கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?

தண்ணீர்



*இன்றைய கதை*

*அதிர்ஷ்டமான மனிதன்*

முல்லா ஓர் நாள் இரவு தன் மனைவியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வீட்டு சுவரின் அருகே ஏதோ ஒரு சத்தம் கேட்டது.

முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டை துப்பாக்கியுடன் தோட்டத்திற்கு சென்று பார்த்தார். தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைந்து கொண்டிருப்பதை பார்த்து துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்.

அதன் பிறகு, காலையில் எழுந்தவுடன் முல்லாவும், அவரது மனைவியும் தங்களின் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முல்லாவின் மனைவி தனது மிகச் சிறந்த சட்டையை துவைத்து மரத்தில் காயப்போட்டிருந்ததைப் பார்த்தார்கள். உடனே முல்லாவின் மனைவி, இது உங்களின் அதிர்ஷ்டமான சட்டையாச்சே! அட அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கி விட்டீரே! என்று முல்லாவின் மனைவி மிகவும் வேதனைப்பட்டார்.

அதற்கு முல்லா, இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். நான் காலையில் அந்த சட்டையை அணிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஒரு வேளை நான் அந்த சட்டையை போட்டு கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்.

நீதி :

எது நடந்தாலும் நம்முடைய நல்லதுக்குத்தான் என நினைக்க வேண்டும்.


*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

*செய்திச் சுருக்கம்*

🔮மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

🔮செய்திகாந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்...நாட்டு மக்களுக்கு மோடி உரை.

🔮தமிழ்நாட்டில் 9 ஆயிரம் போலீஸ் வேலைக்கு 3¼ லட்சம் பேர் எழுத்து தேர்வு எழுதினர்.

🔮தமிழக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்த ஏற்பாடு.

🔮உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி முதல் தங்கப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார் சிந்து.

🔮PM Modi leaves for France on Macron's personal invitation to attend G7 Summit.

🔮Former Finance Minister Arun Jaitley cremated with State honours.

🔮Indian-standard Rafale jet to be ready by September 2021.

🔮NASA investigating first crime committed in space.

🔮P.V. Sindhu becomes first Indian to win Badminton World Championships gold.
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================